முதுகெலும்பை சிதைக்கக்கூடிய தினசரி பழக்கவழக்கங்கள்!

நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் மிகமுக்கியமான வழிகளில் ஒன்று முதுகுவலி. ஏனெனில் நேராக நடப்பதில் இருந்து, குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க என அனைத்திற்கும் நமக்கு முதுகெலும்பின் வலிமை அவசியமான ஒன்று. முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சினை நம் வழக்கமான வாழ்க்கையை வாழ விடாது.

இவ்வளவு முக்கியமான முதுகெலும்பு உடைவதற்கோ அல்லது அதில் பிரச்சினை ஏற்படுவதற்கோ நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களும் ஒரு முக்கியமான காரணம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. இந்த பதிவில் உங்களுடைய எந்தெந்த பழக்கவழக்கங்கள் முதுகெலும்பை பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.

அடிக்கடி ஹை ஹீல்ஸ் அணிவது உங்கள் முதுகெலும்பு அதன் இடத்திலிருந்து விலக காரணமாகிறது. இதனால் உங்கள் தோற்றம் பாதிக்கப்படுவதத்துடன் இடுப்பு பகுதியில் வலியும் அதிகரிக்கிறது. எனவே ஹை ஹீல்ஸ் அணியாமல் இருப்பதே நல்லது.

நீங்கள் ஜிம்மில் அதிக அளவு எடை தூக்க விரும்பினால், அதை பயிற்சியாளரின் உதவி இன்றி செய்யாதீர்கள். புதியதாக அதிக எடை தூக்கும்போது அது உங்களின் முதுகெலும்புகளை பாதிக்கும்.

ஷாப்பிங் பைகள், மளிகை பைகள் என அதிக எடையுள்ள பைகளை தூக்கும்போதும், அவற்றை தூங்கிக்கொண்டு அதிக நேரம் நிற்கும்போதும் இது கழுத்துவலி மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். எனவே பெரும்பாலும் அதிக எடையுள்ள பைகளைதோள்பட்டையில் சுமக்காமல் கைகளில் தூக்கிச்செல்வது நல்லது.

செல்போன் உபயோகிப்பது அத்தியாவசியமான பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இது நமக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் கவனிக்க மறந்துவிட்டோம். போனை உபயோகிக்க கீழ்நோக்கியே பார்ப்பது, பேசுவதற்கு கழுத்தை சாய்ப்பது போன்றவை கழுத்து மற்றும் முதுகெலும்பில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தவறான தூக்கமுறையை பின்பற்றுவது கூட முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக குப்புற படுத்து வயிறு கீழ்நோக்கி இருப்பது முதுகெலும்பை சிதைக்கக்கூடிய ஒன்று. இது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

வீட்டு வேலைகளில் இருந்து தப்பிப்பது என்பது நடக்காத ஒன்று, ஆனால் அந்த வேலைகளை சரியான முறையில் செய்வது உங்கள் முதுகெலும்பிற்கு பாதுகாப்பாய் இருக்கும். உதாரணத்திற்கு தரையை துடைக்கும்போதோ அல்லது துணி துவைக்கும் போதோ உங்கள் முதுகெலும்பு அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் அனைத்து வேலைகளையும் தொடர்ந்து ஒரே நேரத்தில் செய்யாமல் இருப்பது நல்லது.

ஒரே இடத்தில அமர்ந்து கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் மிகஅதிகம். நீண்ட நேரம் முதுகெலும்பு ஒரே நிலையில் இருக்கும்போது அது சிதைய வாய்ப்புள்ளது. இதனால் முதுகுவலி ஏற்படும். எனவே முடிந்தளவு தொடர்ந்து ஒரே நிலையில் வேலை செய்வதை தவிர்க்கவும்.

காபியில் உள்ள காஃபைன் உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சும் சக்தியை குறைக்கக்கூடும். இதன் விளைவு உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் குறையும். எனவே அதிக காபி குடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

புகைபிடிப்பது பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்குகிறது, அதில் முதுகெலும்பு பிரச்சினையும் ஒன்று. பலரும் அறியாத ஒரு தகவல் யாதெனில் புகைபிடிப்பது எலும்புகளை சிதைப்பதோடு முதுகெலும்பு முன்கூடியே சீர்குலைவு அடைய காரணமாக இருக்கிறது. புகைபிடிப்பது எலும்புகளுக்கு செல்லும் நீரோட்டத்தை குறைத்து அவை தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. இதனால் அவை விரைவில் பலவீனமடைந்து எளிதில் முறிவு ஏற்ப்படக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *