முக்கிய செய்திகள்
Home / ஆரோக்கியம் / எச்சரிக்கை – குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்முன் இதை படித்துவிடுங்கள்!

எச்சரிக்கை – குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்முன் இதை படித்துவிடுங்கள்!

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.

அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆப்பிள் விதைகளில் உள்ள அமிக்டாலின் செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஆப்பிள் விதையில் உள்ள சயனைடு எனும் நச்சுப்பொருள், உடலில் செல்லும் ஆக்ஸிஜனை தடைசெய்து, பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டால் மூளை, இதயம் ஆகியவற்றை பாதித்து, கோமா நிலை மற்றும் இறப்புகளை கூட சந்திக்க நேரிடும்.

சுவாசக்கோளாறு, மூச்சுச்திணறல், இதயத்துடிப்பு அதிகமாவது, ரத்த அழுத்த குறைவு போன்ற பிரச்சனைகள் ஆப்பிள் விதை சாப்பிடுவதால் உண்டாகும்.

ஆப்பிள் விதைகளை குறைந்த அளவு சாப்பிட்டாலும், வாந்தி, தலைவலி, வயிற்றுவலி, மயக்கம், சோர்வு ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.

ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும். அதுவும் 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top