ஜிமிக்கி கம்மல் ஆண்டவர் அழைக்கிறார் வெர்சன்!……

தமிழக இளைஞர்கள் அனைவரது வாயிலும் தற்போது முனுமுனுக்கப்படும் பாடல் ஜிமிக்கி கம்மல் பாடல்தான். மோகன்லால் படத்தில் வரும் இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த பாடலில் நடனம் ஆடுயதன் மூலம் ஒரே இரவில் புகழ் பெற்று விட்டார் அதில் ஆடிய ஷெரில் என்ற பேராசிரியை. இந்த  பாடல் இடம்பெற்ற படம் வெளிப்பாடின்டே புஸ்தகம் என்ற மலையாள படம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த  இந்த படம் கூட ஓணம் பண்டிகையை முன்னிட்டுதான் வெளிந்தது. முதலில் படம் சுமார் என்பதால் வசூல் அவ்வளவாக  இல்லை.
இந்நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடல் இணையதளத்தில் வைரலாகவே இப்போது படம் சக்கை போடு போட்டு, வசூலை வாரிக்குவித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழகத்திலும் ஓணம் தினத்தன்று வெளியாகி, பிறகு தூக்கி விட்டனர்.
தற்போது ஜிமிக்கி கம்மல் பாடல் வைரலானதால், தமிழகத்தில் மீண்டும் வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தை ரீ  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *