முக்கிய செய்திகள்
Home / சினிமா / இதனால் தான் பரணி காலில் விழுந்தேன்! உண்மையை சொன்ன ஜூலி

இதனால் தான் பரணி காலில் விழுந்தேன்! உண்மையை சொன்ன ஜூலி

ஜுலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நடிகர் பரணியை சந்தித்து பொது இடத்திலேயே காலில் விழுந்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.

இந்நிலையில் அது பற்றி இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவிடம் பேசிய ஜூலி, “அவரை நான் அண்ணன் என கூப்பிட்டேன், அதற்கு அவர் உண்மையாக தான் இருந்தார்.

அவர் வீட்டை விட்டு போனதே எனக்கு வருத்தமாக இருந்தது. அண்ணன் சுவர் தாண்டிய போதே எனக்கு மனசு உறுத்தியது, ஆனால் ‘என்னுடன் சேர்ந்தால் உன்னையும் ஒதுக்குவார்கள்’ என அவர் சொன்ன ஒரு வார்த்தையை ஏற்று தான் நான் அவரை அப்போது கூப்பிடவில்லை” என ஜூலி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலி வீட்டில் இருந்து வெளியேறியபோது அவருக்கு சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி நேரிலும் மக்கள் வெறுப்பை காட்டினார்.

அது பற்றி இன்று பேசிய ஜூலி, “வெளியே போன பிறகு ஒரு வாரம் எங்குமே போக வில்லை வீட்டிலேயே தான் இருந்தேன், பின்னர் ஒரு நாள் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு ஒரு கடைக்கு போன போது என்னை பார்க்க 300-400 பேர் கூடிவிட்டனர்.”

“சிலர் பொய் சொன்னேன் என்பது பற்றி பேசினாலும், பலரும் என்னுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர், சிலர் ‘நீங்கதானே அது’ என ஆர்வமுடன் கேட்டனர்,” என ஜூலி கூறினார்.

மேலும் சிலர் அவரை வீட்டுக்கே அழைத்துக்கொண்டு போய் ஜுஸ் கொடுத்து அன்பாக பேசினர். ”அதை பார்த்த என் நண்பர்களுக்கு மிகவும் சந்தோசமாக, பெறுமையாக இருந்தது” என ஜுலி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top