ஆரவ்வை உதறித் தள்ளினார் ஓவியா!

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா, காதலித்து வந்ததாக கூறிய ஆரவ்வை உதறித் தள்ளியிருப்பது போல் புதிய டுவிட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் பேச்சும், நடவடிக்கைகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது, எப்போதும் கலகலப்புடனும், சுறுசுறுப்படனும் இருந்த நடிகை ஓவியா திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளரான ‘ஆரவ்’ உடன் காதல் வயப்பட்டு அது தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு மாறியதாக ஓவியா தெரிவித்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலமாக ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதிலும் ஆரவ்வை காதலிப்பதாகவும், மறக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ஆரவ் உடனான தனது காதல் குறித்து புதிய டுவிட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவரது     உறவுநிலை (Relationship status) சிங்கிள் என்றும் திருப்தியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் ஆரவ் உடனான காதலை அவரே முறித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *