​400 குழந்தைகளை காப்பாற்ற 10 கிலோ வெடிகுண்டை தூக்கிக்கொண்டு 1கிமீ ஓடிய போலீஸ்காரர்!

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பட்டேல் என்னும் காவல்த்துறை அதிகாரி தனது உயிரை பணயம் வைத்து 400 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர், இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.

உடனடியாக அந்த பள்ளிக்கு வந்த காவல்த்துறை அதிகாரிகள் அந்த பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டையும் கண்டறிந்தனர்.

10 கிலோ எடை கொண்ட அந்த வெடிகுண்டு எப்போது வெடிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் அங்கிருந்த தலைமைக் காவலரான அபிஷேக் பட்டேல் என்பவர் சிறிதும் தயங்காமல் அந்த வெடிகுண்டை தன் தோலில் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட 1 கிமீ தூரம் ஓடிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வைத்தார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாத அபிஷேக் பட்டேல்லின் இந்த வீர தீர செயலால் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.

அபிஷேக் பட்டேல் கூறுகையில், ”வெடிகுண்டை கண்டதும் எடுத்துக் கொண்டு என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ ஓடினேன். குழந்தைகள், வீடுகள் இல்லாத பகுதியை நோக்கி ஓடுவதே எனது குறிக்கோளாக இருந்தது” என்றார். வெள்ளிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *