முக்கிய செய்திகள்
Home / சினிமா / சற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 மேக்கிங் வீடியோ!

சற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 மேக்கிங் வீடியோ!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சென்னையில் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து, அதனுள் பல முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.0 படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top