பிக்பாஸை வசைபாடிய காயத்ரி- அதிரடியான முதல் ரீ-ட்வீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் நான் ஒன் மேன் ஆர்மி என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

I SUPPORT GAYATHRI என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டரில் தளத்தில் வெளியான செய்தி ஒன்றையும் ரீ-ட்வீட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

அவர் ரீ-ட்வீட் செய்த செய்தியில் கூறியிருப்பதாவது:

இருட்டு இல்லையென்றால் வெளிச்சத்துக்கு முக்கியத்துவம் இருக்காது. வில்லன் இல்லாமல் நாயகன் கிடையாது. காயத்ரி ரகுராம் இல்லாமல் ஓவியா கிடையாது. பிக் பாஸை நடத்தும் ஊடகம் பசியோடும், பேராசையோடும் உள்ளது.

தங்களது வெற்றியைக் காட்டி மற்ற போட்டி ஊடகங்களை வெல்லப் பார்க்கிறது. இப்போது நாயகனும் இல்லை, வில்லனும் இல்லை. தங்களது போட்டியில் அவர்கள் ஓவியாவை முன்னிறுத்தி மற்ற ஒவ்வொரு போட்டியாளரின் நற்பெயரையும் அழித்தார்கள்.

போட்டியாளரின் நற்பெயர் மட்டுமல்ல, அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் நற்பெயரையும் அழித்தார்கள். ஊடகம் மக்களுக்கு பொழுதுபோக்கை தரவேண்டும்.

ஆனால் இவர்கள் வெறுப்பையும், கண்ணீரையும் வரவழைத்தார்கள். உண்மையைக் காட்டி நல்லதை உருவாக்க வேண்டுமே தவிர அதை மறைத்து அழிவை உருவாக்கக் கூடாது.

எனக்கு எப்போதுமே காயத்ரி ரகுராம் மீது மரியாதை இருக்கிறது. சமீபத்தில் பேசிய ஓவியா உட்பட அனைவரின் மீதும் அதே மரியாதை இருக்கிறது. மக்களை முட்டாளாக்கி நாயகன், வில்லன் என்ற பிம்பத்தை ஊடகத்தால் உருவாக்க முடியாது. ஒரு நாள், மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *