சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

MrfTGtitsdhafhashf

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக அதிகளவில் ரசிகர்கள் அஜித்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, கிராமம் முதல் நகரம் வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்றும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இந்நிலையில் பிளாட்பாரத்தில் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒருவர் அஜித் குறித்த கூறிய கருத்து தற்போது யூடியூப் சேனலில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் அவரை ஒருமுறை நேரில் சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பதே தனது ஒரே ஆசை என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ அஜித்தின் கவனத்திற்கு செல்லுமா? அஜித் அவரை அழைத்து ஆசையை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *