முக்கிய செய்திகள்
Home / ஆரோக்கியம் / 15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

neck

கழுத்து, அக்குள், தொடையின் உள் பகுதி போன்ற இடங்களில் கருமையான படலம் ஏற்படுவதற்கு காரணம் அதிகமாக வியர்வை வெளியேறுவது, வாக்சிங் அல்லது ஷேவிங் செய்வது, டியோடரண்ட் பயன்படுத்துவது மற்றும் சூரியக்கதிர்கள் அவ்விடத்தில் அதிகமாக படுவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சில சமயங்களில் உடல் பருமன், சர்க்கரை நோய், இரையக குடலிய அல்லது சிறுநீர்பிறப்புறுப்பு புற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் அவ்விடங்கள் கருமையாக இருக்கும்.

 

இக்காலத்தில் மக்கள் அழகை, நிறத்தை மேம்படுத்த பல சரும நிபுணர்களை சந்தித்து, தங்களது அழகை மேம்படுத்தி வருகிறார்கள். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க, சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்க பணத்தை கண்டபடி செலவு செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றி வாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்

 

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் கருமையாக உள்ள அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 

தேவையான பொருட்கள்:

வெள்ளை நிற க்ளே பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்பால் – 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை – 1/2 டேபிள் ஸ்பூன்

 

ஒரு பௌலில் வெள்ளை நிற க்ளே பவுடரை போட்டு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஒன்றை வாரத்திற்கு 3 முறை பின்பற்றி வந்தால், கருமை படலம் நீங்குவதை நன்கு காணலாம்.

 

இந்த வழிகளை பின்பற்றும் போது சூரியக்கதிர்கள் அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வெளியே செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.

 

தண்ணீர் அதிகம் பருக வேண்டும் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளான பாதாம், பப்பாளி, அவகேடோ, ப்ராக்கோலி, முட்டை, குடைமிளகாய், பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

 

வேண்டுமானால், இந்த பேக்களுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

 

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top