சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

Air-Asia-1-768x768

கோலாலம்பூர் – ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

அதன் படி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூப்பர்ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் உள்நாடு மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

39 ரிங்கிட்டில் இருந்து தொடங்கும் பயணச்சீட்டு விற்பனையை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளும் படி ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

பயணக் காலம் 28 ஜூன் தொடங்கி 24 நவம்பர் வரை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *