அஜித் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் ஜீ.வி.பிரகாஷ்!!!

9d3boQLp8654

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன.

ஆனால், ஜீ.வி.பிரகாஷ் அதனை கவனிக்காமல் விஜய்,அஜித் ரசிகர்களின் சண்டையில் தன்னையும் இணைந்துகொண்டு சமூக வலைதளங்களில் சண்டையிட்டு தன் தரத்தை தானே தாழ்த்தி கொண்டுள்ளார் என்பது கசப்பு.

நேற்று இவர் அஜித்-தை பற்றி ட்வீட்டிய பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கடும் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் ஜீ.வி.பிரகாஷை வசை மழையில் நனைய வைக்கவே, பதிவிட்ட அனைத்து ட்வீட்களையும் டெலிட் செய்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

விஜய் அஜித் ரசிகர்கள் இரவு பகல் போன்று இயல்பாகி விட்ட நிலையில் பிரபலங்கள் இதில் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி கொள்வதே சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *