உடல் எடையை கணிசமாக குறைக்கும் பார்லி கஞ்சி குடித்து இருக்கிறீர்களா?

vg6CPl7s800x480_IMAGE54382073

நாளுக்கு நாள் அதிகமாய் உடல் பருக்கிறதே என நீங்கள் எத்தனையோ டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள்.

உடல் குறைவது போல் தோன்றினாலும், திரும்பவும் உடல் பருமனாகிவிடும். இதற்கெல்லாம் சோர்ந்து போகவேண்டாம். விடாகண்டனாய் உடலில் தங்கியிருக்கும் கொழுப்பினை, கொடாகண்டனாய் நீங்கள், கரைக்காமல் சோர்ந்து போகக் கூடாது.

வெறும் உடற்பயிற்சியும் டயட்டும் மட்டும் தீவிர கொழுப்பினை கரைக்க போதாது. வயிறு , இடுப்பு போன்ற பகுதிகளில் செயல் புரிந்து , அங்கேயிருக்கும் பிடிவாதமான கொழுப்பினை அகற்ற என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள்.

அப்படிப்பட்ட கொழுப்பினை கரைக்க உதவும் எளிய உணவு வகை என்ன தெரியுமா?

பார்லி.

பார்லியை, அரிசிக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். ஓட்ஸ், கோதுமை வகையறாப்போல குறைந்த கார்போஹைட்ரேட் சத்துக்களை கொண்டுள்ளது.

பார்லி எவ்வாறு கொழுப்பு கரைய உதவுகிறது?

பார்லி மற்றும் நீரினைக் கொண்டு தயாரிக்கும் ஒரு கப் பார்லி கஞ்சியில், 600-750 கலோரி உள்ளது. இந்த கலோரியை எளிதாக கரைத்து விடலாம்.

பார்லி அரிசியில் பீட்டா குளுகான் என்ற நார்ச்சத்து உள்ளது. இந்த சத்து பார்லியை எப்படி சமைத்தாலும் அழியாது. இது நரம்புகளை பலப்படுத்துகிறது. மேலும் உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பிவிடும். அங்கே கெட்ட கொலஸ்ட்ரால் முழுவதும் செரிமானத்திற்கு உட்பட்டு கரைந்து விடும்.

இவ்வாறு பார்லி கஞ்சி உடல் கொழுப்புகளை குறைக்க உதவும் எளிதான உணவு வகை என்பதில் சந்தேகமேயில்லை. பசி எடுக்காமல் அதிக நேரம் தாக்கு பிடிக்க வைக்கும்.

குடல்களின் இயக்கம் :

பார்லி கஞ்சி உணவு மற்றும் சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் செயல்களை நன்றாக தூண்டுகிறது. குடல்களை சுத்தப்படுத்துகிறது. நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. பார்லி கஞ்சி.

பார்லி கஞ்சி தயாரிக்கும் முறை :

தேவையானவை :

பார்லி அரிசி – 1 கப்நீர் – 4 கப்எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் அளவு.

பார்லி அரிசியை நன்றாக களைந்து, 4 கப் அளவுள்ள நல்ல நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் ஊறவைத்த நீருடனே அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேகவிடுங்கள். குறைந்த தீயிலேயே அடுப்பை வைக்கவும்.

அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளர வேண்டும். பார்லி நன்றாக வெந்ததும், இறக்கி அந்த நீரினை வடித்துக் கொள்ளுங்கள். 4 கப் நீர் ஒரு கப்பாக இப்போது இருக்கும்.

அந்த நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பாக குடியுங்கள். இது சிறந்த முறையில் பலனைத் தரும். காபி தேநீர்க்கு பதிலாக தினமும் காலை மாலை இருவேளைகளிலும் இந்த கஞ்சியை குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *