கேரட் விதை எண்ணெய் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

sl29

கேரட் விதை எண்ணெய் காட்டிலிருக்கும், கேரட் விதைகளிலிருந்து பிரிக்கப்படுகின்ற எண்ணெய். இது தங்க நிறத்தில் இருக்கும். இந்த எண்ணெயில் எண்ணெற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என நீங்கள் அறிவீர்களா? இல்லையெனில் படிப்பதை தொடருங்கள்.

கேன்சரை எதிர்க்கும் :

வயிறு, வாய் மற்றும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளில் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

நுரையீரல் பிரச்சனைகள் :

இருமல், சளி, நுரையீரல் அலர்ஜி ஆகியயவ்ற்றை கட்டுப்படுத்தும் குணங்களை கேரட் விதை எண்ணெய் கொண்டுள்ளது.

அல்சரை குணமாக்கும் :

இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு போன்ற அலர்ஜி, அல்சர், சோரியாசிஸ் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

ஆர்த்ரைடிஸை குணமாக்கும் :

இது சிறு நீரகம் மூலமாக, யூரிக் அமிலத்தை வெளியேற்றி மூட்டு வாதத்தினை வரவிடாமால் காக்கிறது.

வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் :

வாய்வு, உப்புசம் மற்றும் அஜீரணம் ஆகியவற்றை சரி செய்கிறது. கல்லீரலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மையை சரி செய்து நடு நிலையாக்குகிறது.

காயங்களை ஆற்றுகிறது :

கேரட் விதை எண்ணெயில் ஆந்டி செப்டிக் குணங்கள் உள்ளது. அவை சருமத்தில் ஏற்படும் காயங்கள் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரணங்களுக்கு விரைவில் நிவாரணம் தந்து குணமாக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ஜீரணத்தை அதிகரிக்கின்றது.

சுருக்கத்தை போக்குகிறது :

கேரட் விதை எண்ணெய் மிகச் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இவை உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. சுருக்கங்களை குறைக்கிறது. தசைகளுக்கு பலம் தருகிறது. கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.

முறையற்ற மாதவிலக்கு :

தொடர்ந்து கேரட் விதை எண்ணெயை உணவிவில் சேர்த்துக் கொண்டால், சீரற்ற மாதவிலக்கு சரியாகிவிடும் என கூறுகிறார்கள்.

ஹார்மோன்களை தூண்டுகிறது :

இந்த எண்ணெய் நரம்புகளை தூண்டுகிறது. மூளையை நன்றாக இயக்கச் செய்கிறது. ஹார்மோன் மற்றும் என்சைம்களின் சுரப்புகளை நன்றாக தூண்டுகிறது.

திசுக்களின் வளர்ச்சிக்கு :

கேரட் விதை எண்ணெயில் சைட்டோ பைலேக்டிக் குணம் உள்ளது. இது புதிய திசுக்கள் வளர உதவி புரிகிறது. ஆகவே உடல் வலிமையாகவும், புத்துணர்ச்சியோடவும் இருக்கும்.

மன அழுத்தம் :

வேலை மற்றும் மனக் கவலைகளால் உண்டாகும் அழுத்த்தை போக்குகிறது எந்த கேரட் விதை எண்ணெய்.

குறிப்பு :

இதனை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உபயோகப்படுத்தக் கூடாது. இது சில சமயம் அலர்ஜியை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *