தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா?

513468935_XS

தேங்காய் பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

விட்டமின்சி, விட்டமின் இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்
  • தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
  • மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.
  • பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.
  • வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற தேங்காய் பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.
  • தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.
  • வறண்ட போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.
  • வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *