அலுமினியத்தாளை முகத்தில் இவ்வாறு மூடுவதால் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

ZYxquIc5800x480_IMAGE53849831

உணவை கூலாக அல்லது வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள அலுமினியத்தாளை கொண்டு பொதுவாக உணவு பொருட்களை மூடி தான் பார்த்திருப்போம். இதைக் கொண்டு முகத்தை மூடுவதால் என்ன ஆகப் போகிறது என யோசிக்கிறீர்களா?

யோசனையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இதைப்படியுங்கள். ஆம், அலுமினியத்தாளை உணவு பொட்டலங்களை மூடுவதுக்கு மட்டுமின்றி, முதுகு வலி, கால் வலி, கழுத்து, தசை வலி போன்றவற்றுக்கு நல்ல தீர்வு காண கூட பயன்படுத்தலாம்.

காயங்கள் ஆறவும், தீக்காயங்களுக்கு தீர்வுக் காணவும் சீனர்கள் மற்றும் ரஷியர்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோள்பட்டை, முட்டி, கால்கள் அல்லது விரல்களில் எந்த இடத்தில் நீங்கள் வலியை உணர்கிறீர்களோ அந்த இடத்தில் அலுமினியத்தாளை கொண்டு காட்டுங்கள். பேண்டேஜ் அல்லது பேண்டேய்டு போல கட்டவேண்டும்.

 

இதை இரவு அல்லது பகல் வேளையில் முழுக்க நீங்கள் கட்டியிருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல வலிநிவாரணம் பெறலாம்.

 

தீக்காயம் அடைந்தால், உடனே தீக்காயம் பட்ட இடம் குளுமையான பகுதிக்குக் கீழ் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் சருமம் சேதம் அடையவில்லை எனில், நல்ல துணியை கொண்டு நன்கு துடைத்து சுத்தம் செய்யுங்கள்.

 

ஒருவேளை சருமத்தில் சேதம் உண்டாகியிருந்தால். காயம் உலர்ந்த பிறகு மருந்து வைத்து, அதன் மீது அலுமினியத்தாளை கொண்டு காயத்தை கவர் செய்து காட்டுங்கள். காயத்தின் வலி குறையும் வரை இதை நீங்கள் கட்டியிருக்கலாம். இது, காயம் சீக்கிரம் ஆற உதவும்.

 

நீண்ட நேர வேளை, அல்லது நண்பர்களுடன் அரட்டை, கும்மாளம் அடித்து மிக சோர்வாக உணர்கிறீர்கள் எனில், நிச்சயமாக தூக்கமின்மை, களைப்பு போன்றவை ஏற்படும். இந்த களைப்பை போக்க, அலுமினியத்தாளை சிறுதுண்டாக வெட்டி, குளுமையான இடத்தில் (ஃப்ரிட்ஜ்) வைத்து உறைய வையுங்கள்.

 

பிறகு முகத்தில் எங்கெல்லாம் நீங்கள் அழுத்தமாக உணர்கிறீர்களோ, கன்னம், கண்கள், போன்ற இடத்தில் 15 நிமிடங்கள் வைத்துக் கொள்வதால் நீங்கள் விரைவாக சுறுசுறுப்பாக உணர முடியும்.

 

சோர்வாக, உடல் வலியாக உணரும் போது, வீட்டில் வலிநிவாரண மருந்து இல்லையெனில், மருத்துவ உதவி கூற யாரும் இல்லை எனில், நீங்கள் இந்த அலுமினியத்தாளை கொண்டே நல்ல தீர்வுக் காண முடியும். இது ஒன்றும் விசித்திரமான முறை அல்ல, சீனர்களும், ரஷியர்களும் இதை பாரம்பரிய வலிநிவாரண முறையாக கடைபிடித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *