இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!

ht1745

உண்ணும் உணவில் நல்ல மணத்தையும், ருசியையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. மேலும் வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.

மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை எல்லாவகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கூறியுள்ளனர்.

பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைத்து இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றை சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். ஆகவே பூண்டை சாப்பிடுவோம்! இதயத்தைப் பாதுகாப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *