உயிர் காக்கும் தயிர்…!

greek yogurt; Shutterstock ID 150228722; PO: today.com
உயிர்காக்கும் தயிரா? அது எப்படி? என்று அறிய ஆவலாக வந்துள்ள அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு சிறந்த உணவுப்பொருள் தயிர் என்றால் அது
மிகையாகாது.

தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது. வெறும் ருசிக்காகவே உண்பது இதுவல்ல. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன? வாங்க பார்த்துடலாம்.

உயிர்காக்கும் தயிர் என்று குறிப்பிட்டிருக்கிறேனே அது எப்படி என்கிறீர்களா?

நோயில்லா உடலே அதிக வாழ்நாளைக் கொடுக்கும். உடலில் நோய்கள் பல வரக்காரணமே உடற்சூடுதான். அதனால் உடலில் பல்வேறு இராசயன மாற்றங்கள் ஏற்பட்டு, வெப்பத்தால் ஒவ்வொரு உடல் உறுப்பும் தனது பணியை சரிவர செய்யாமல், இயங்காமல் இருந்துவிடும். இதனால் விளைவது நோய்கள்.

உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது. தலையில் தயிரைத் தேய்துக்கொள்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, நல்ல ஆரோக்கியமான, பளபளக்கும் தலைமுடியைப் பெறலாம். உடற் சூடும் தணியும்.

உடல் சூடு தனிவதால் , உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சரிவர வேலை செய்யத்துவங்கும். உடலும் சீரான நிலைக்கு வந்துவிடும். இப்போது சொல்லுங்கள் தயிர் ஒரு உயிர்காக்கும் உணவுப்பொருள்தானே..

மேலும் தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது.

2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.

3. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்ற உபாதைகளை சரி செய்வதில் தயிரின் பங்கு அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தயிரை அப்படியே சாப்பிடலாம். இதன் சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் நீங்கும்.

4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும்.

5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும்.

6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன.

8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.

9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும்.

10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.

11. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தயிர் பயன்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது தயிர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

12. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும்.

தயிரின் முக்கியப் பயன்:

ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *