உறங்குவதற்கு முன்பு வாழைப்பழம் வேகவைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள்!

9c2023529b7a46b582b13039ec5af272

இன்றைய வாழ்வியல் முறையில், படுத்தவுடன் உறக்கம் வருவது என்பது பெரிய வரம். மன அழுத்தம், பதட்டம், வேலை பளு, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல காரணங்களால் பலரும் உறக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.

உங்கள் மன நிலை சிறப்பாக இருந்தால், தூக்கம் தன்னைப் போல தானாக வரும். உங்கள் மன நிலையை சரி செய்ய நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மற்றும் உங்கள் உறக்கம் சார்ந்த ஹார்மோன்களை சமநிலையில் பேணிக்காக்க வேண்டும்.

சில உணவுகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் கூட இந்த தூக்கமின்மையை சரி செய்ய உதவும். சிலர் கேள்வி பட்டிருக்கலாம், வாழைப்பழ டீ பருகினால் உறக்கம் நன்கு வரும் என. ஆனால், வாழைப்பழத்தை வேக வைத்த நீரை பருகினாலே உறக்கம் நன்றாக வரும்.

வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதிலும் மெக்னீசியம் உறக்கம் சார்ந்த தொல்லைகளை சீராக்க பெருமளவு உதவுகிறது.

 

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் கலவையானது உங்கள் தசைகளை இலகுவாக உணர உதவுகிறது. மெக்னீசியத்தில் இருந்து கிடைக்கும் கனிம சத்துக்கள் நீங்கள் ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. மேலும், வாழைப்பழம் 100% இயற்கையானது, ஆரோக்கியமானது.

 

  • வாழைப்பழம் ஒன்று
  • ஒரு கிளாஸ் நீர்
  • இலவங்கப் பட்டை சிறிதளவு (தேவை என்றால்)

 

  • வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிடுங்கள்.
  • பிறகு வாழைப்பழத்தை நீரில் வேக வைய்யுங்கள்.
  • குறைந்தது 10 நிமிடங்களாவது வாழைப்பழம் நீரில் வேக வேண்டும்.
  • பிறகு தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை தூவவும்.

 

தினமும் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம். மேலும், மனநிலை மேலோங்கவும், ரிலாக்ஸாக உணரவும் இது பயனளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *