அஜித்துக்கு ஜால்ரா அடிக்கிறது இதுக்காகவா? குமுதம் இதழின் நிஜ முகம் வெளியானது..

jeisapacdggsi

ஒரு காலத்தில் படிக்க தகுதியான பல்சுவை பத்திரிகைகளாக விளங்கிய குமுதமும், ஆனந்த விகடனும் கடந்த சில வருடங்களாக அதிகம் விற்பனையாகும் சினிமா பத்திரிகையாக மாறிவிட்டன.

சினிமா நட்சத்திரங்களுக்கு துதிபாடுவதில் யார் நம்பர் ஒன் என்று குமுதத்துக்கும், ஆனந்தவிகடனுக்கும் வாரம் வாரம் போட்டியே நடக்கிறது.

குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்களை, பேட்டிகளை, அவர்கள் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகளை, புகைப்படங்களை வெளியிடுவதில்  இரண்டு இதழ்களுக்கும் இடையில் வெட்டுகுத்து நடக்காததுதான் பாக்கி.

அந்தளவுக்கு  கடும்போட்டியே நடக்கிறது.

இந்த போட்டியில் ரஜினி, விஜய், சூர்யா தரப்பை ஆனந்த விகடன் அமுக்கிப் போட, அஜித் தரப்பை குமுதம் வளைத்துப்போட்டது.

அஜித் சம்மந்தப்பட்ட தொடர்பு கிடைத்ததும், அஜித் பற்றிய சிறப்பிதழ் வெளியிட்ட குமுதம், அடுத்ததாக அஜித் பற்றிய தொடரையும் வெளியிட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக அஜித்துக்கு குமுதம் பத்திரிகை கொடுத்து வரும் அதீத முக்கியத்துவத்துக்குப் பின்னால் இன்னொரு சுயநலமும் இருக்கிறது.

அதாவது அஜித்துக்கு ஜால்ரா அடித்ததின் தொடர்ச்சியாக, அஜித்திடம் கால்ஷீட் கேட்டு தூதுவிட்டிருக்கிறதாம் குமுதம்.

இந்த தகவல் அஜித்துக்கு சொல்லப்பட்டதும் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

சிறப்பிதழ், தொடர் என்று குமுதம் தனக்கு பப்ளிசிட்டி கொடுத்ததற்கு பின்னால் இப்படியொரு பகீர் பிளான் இருந்திருக்கிறதே என்று நொந்து போனாராம் அஜித்.

குமுதம் பத்திரிகைக்கு கால்ஷீட் கொடுத்தால்…

ஏற்கனவே படத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆனந்த விகடன் (விகடன்டாக்கீஸ்), குங்குமம் (சன் பிக்சர்ஸ்), புதிய தலைமுறை (வேந்தர் மூவீஸ்) போன்ற பத்திரிகைகளும் கால்ஷீட் கேட்டு வரிசைக்கட்டி நின்றால் என்னாவது என்பது மட்டுமல்ல, இப்படியே மீடியாக்களுக்கு கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்தால் கடைசியில் காப்பி பேஸ்ட் டாட் காம் ஆள் எல்லாம் கால்ஷீட் கேட்பார்களே என்று யோசித்திருக்கிறார்.

இதன் காரணமாக குமுதம் பத்திரிகைக்கு கால்ஷீட் தர இயலாது என்பதை நாசூக்காக தெரிவித்துள்ளார் அஜித்.

ஆனால் எப்படியாவது அஜித்திடம் கால்ஷீட் வாங்கியே தீருவது என்ற நப்பாசையில் குட்டிக்கரணம் போட்டு வருகிறது குமுதம்.

இதற்கெல்லாம் அசருவாரா அஜித்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *