எள்ளு தோசை!

food29

தேவையானவை

பச்சரிசி – 3 கப்
புழுங்கலரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – முக்கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
எள்ளு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும்.

தோசை மாவு 6 மணி நேரம் புளித்த பிறகு, வாணலியில் நிறைய நெய் ஊற்றி சூடானதும் எள்ளை சேர்க்கவும். எள்ளு நன்றாக பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள தோசை மாவுடன் எள்ளை சேர்த்து நன்றாக கலக்கிய பின் அடுப்பை மீடியமாக எரியவிட்டு, தோசைக்கல்லில் நல்ல சூடு ஏறியதும், நடுவில் மாவை ஊற்றி கை நடுக்காமல் தட்டை கரண்டியால் வட்டமாக பரப்பிக்கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். சுற்றிலும் சிறிது நெய்விட வேண்டும். திருப்பிப் போட வேண்டும். பிறகு மொறு மொறுப்பாக எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள எந்த சட்னி ஆனாலும் சூப்பர்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *