இளையதளபதி உச்சத்தை அடைய இதுதான் காரணம் – சொல்கிறார் இளம் கதாநாயகன்

vijay-story_647_073115111920

இளையதளபதி நடிகர் விஜய்க்கு சாதாரண மக்கள் மட்டுமல்ல பல நட்சத்திரங்களும் ரசிகர்களாக உள்ளனர்.

அந்தவகையில் களம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஸ்ரீனியும் விஜய்யின் தீவிர ரசிகராம். இவர் ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, மதராசப்பட்டினம், தலைவா போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

அதிலும் தலைவா படம் தான் இவருடைய வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்ததாம். இது பற்றி அவர் கூறுகையில், விஜய்யின் தீவிர ரசிகன் நான். அவர் படித்த கல்லூரியில் படித்ததையே பெருமையாக சொல்லிக் கொண்டு இருப்பேன்.

விஜய் சாரை நெருக்கத்தில் பார்த்த போது தான் அவர் இந்த உச்சத்துக்கு வர காரணம், எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற முக்கிய பாடத்தை அவரிடம் கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

இவர் பி.வாசு, ஜான் மகேந்திரன், ஜீவா ஆகியோருடன் உதவி இயக்குனராகவும் பணியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *