பின்வாங்கியது “என்னைஅறிந்தால்”, பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை!

c85

“என்னை அறிந்தால்” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “என்னை அறிந்தால்”.

“என்னை அறிந்தால்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஜனவரி 29-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் அவர் “என்னை அறிந்தால்” படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதிகட்டப் பணிகள் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. இதனால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார்.

பொங்கல் வெளியீடாக ‘ஐ’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் மட்டுமே தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *