முக்கிய செய்திகள்
Home / சமையல் / சுவையான அன்னாசி ரசம்!!

சுவையான அன்னாசி ரசம்!!

food27

தேவையான பொருட்கள்

அன்னாசி – 5 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)
வற்றல் மிளகாய் – 5
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
புளி – ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி – சிறிது
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையானது

செய்முறை

அன்னாசிப்பழத்துண்டுகளை சிறிது தண்ணீருடன் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வற்றல் மிளகாய், தனியா மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், கடுகு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, ஒன்றாக சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

கடுகு, சீரகம் கறிவேப்பிலையை தாளித்து அதில் புளித் தண்ணீயை ஊற்றி உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும். புளி தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியில் அன்னாசி பழச்சாறை விட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கிய பின் கொத்துமல்லி சேர்த்தால் சூடான, சுவையான அன்னாசி ரசம் தயார். இந்த ரசத்திற்கு தக்காளி சேர்க்ககூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top