சாப்பிட்ட பின் செய்யகூடாத பழக்கங்கள்!!

family

நாம் அனைவரும் சாப்பிடும் சாப்பாடு டேஸ்டாக இருக்கவேண்டும் என்பதிலே கவனம் எழுத்துகிறோம். நாம் சாப்பிட்ட பிறகு நம் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது, சாப்பாடு சரியாக செரிமானம் அடைகிறதா அல்லது எந்தனை மணிநேரத்தில் செரிமானம் அடைகிறது, ஒரு வேளை உணவு செரித்த பின்புதான் சாப்பிடுகிறோமா என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. டயட் உள்ளவர்கள் கூட சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் தவிர சாபிட்ட பிறகு ஏடாகூடமாக எதையாவது செய்வார்கள். சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவற்றை பார்ப்போம்.

காலை உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது, சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேர இடைவெளிக்கு பின்தான் மறுபடி சாப்பிடவேண்டும். நன்கு பசித்த பின் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. ஆனால் சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிட்டால் முதலில் பழங்கள் தான் செரிமானம் அடையும், சாப்பாடு செரிமானம் அடைய அதிகநேரமாகும் அதனால் வயிறுவலி ஏற்படலாம்.

சாப்பிட்ட உடனே நடப்பது, மூச்சிபயிற்ச்சி, யோகா போன்ற எந்தவித உடல்பயிற்ச்சியும் செய்யக்கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம். சாப்பிட்ட பின் நடக்கலாம் என்று விபரம் உள்ளவர்களே செய்வார்கள் ஆனால் அது தவறு அப்படி செய்தால் இரத்த ஓட்டம் செரிமான மண்டலத்திற்கு செல்லாது அதனால் செரிமானம் தடைமாடும்.

சாப்பிட்ட பின்பு  சிகரெட் பிடிக்ககூடாது அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். கார்பன்டை ஆக்ஸைடு முழுமையாக வெளியேறாமல் நுரையிரலில் தாங்கிக்கொள்ளும்.

சாப்பிட்ட உடனேயே குளிக்கக்கூடாது ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும். சாப்பிட்டு இரண்டு மணிநேர இடைவெளிக்கு பின்னரே குளிக்கவேண்டும்.

சாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன்டீயோ குடிக்கக்கூடாது. ஏனெனில் டீ இழையில் உள்ள ஆசிட் உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் தடைபடுத்தும். சாப்பிட்டு அரைமணிநேரம் கழித்து டீ குடிக்கலாம்.

பகலிலையோ, இரவிலையோ சாப்பிட உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் முதல்  இரண்டு மணிநேரம் வரை கழித்தே உறங்க வேண்டும்.

இது போன்ற தவறான பழக்கங்கள் இருந்தால் அவற்றை திருத்திகொள்ளுங்கள். நம் பிள்ளைகளுக்கும் அவற்றை பழக்குங்கள். உணவே மருந்து என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வை வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *