அவர் குறித்த காலத்துக்குள் முடிக்கமாட்டார் – ஹாரிஸைத் தாக்குகிறாரா கே.வி.ஆனந்த்?

NTLRG_160319110316000000

அனேகன் படத்தையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளார் கே,வி.ஆனந்த். தனது கடைசி நான்கு படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையை மட்டுமே பயன்படுத்திய கே.வி.ஆனந்த் இம்முறை ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் கைகோர்த்துள்ளார்.

2005 ஆண்டு முதல் படமாக கனா கண்டேன் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த், அதற்கடுத்த படமான அயன் தொடங்கி  அனேகன் வரை ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மட்டுமே தனது படங்களில் பயன்படுத்தி வந்தார். மேலும் இவர்களின் கூட்டணியில் அமைந்த  பாடல்கள் மெகா ஹிட்டாகி மியூசிக் சார்ட்டுகளை கலக்கியதை நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

வெற்றி மட்டுமல்லாமல் 10 வருட நட்பாயிற்றே? ஏன் இந்த திடீர் மாற்றம்? என கேவி.ஆனந்திடம் விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்.

நான் எனது ஒளிப்பதிவாளரை மாற்றிக்கொண்டே இருப்பேன். அப்படித்தான் இதுவும். மேலும் இந்தப் படத்திற்கு கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தக்  கால இடைவெளியில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை முடித்துக் கொடுக்க முடியாது. அவர் மிகவும் பிஸியாக வேலை செய்துகொண்டிருக்கிறார். எனவே தான் ஆதி. அதேபோல் ‘தனி ஒருவன்’ படத்தில் ஆதியின் இசை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படமும் அதே போல் த்ரில்லர் படம் தான் எனவே தான் ஆதியை ஒப்பந்தம் செய்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் எனது நெருங்கிய நண்பர் . இது சின்ன இடைவேளை மட்டுமே . நாங்கள் இருவரும் அடுத்த படத்தில் கண்டிப்பாக இணைந்து பணீயாற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *