சிக்கன் சூப்!!

food24

தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் -2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
பட்டை, லவங்கம் – சிறிதளவு
முட்டை – 1
எலுமிச்சம் பழம் – 1
மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய கலவையில், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிதாக அறிந்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும் பின் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கரை திறந்து சூடாக இருக்கும் போது முட்டையின் வெள்ளை கருவைமட்டும் சிறிது சிறிதாக ஊற்றி கலக்குங்கள் வெள்ளையாக திரிதிரியாக வரும். பின்பு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடுங்கள் இப்பொழுது மிகவும் சுவையான சிக்கன் சூப் ரெடி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *