நட்சத்திர கிரிக்கெட் போட்டி! அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம் வெளியீடு!

cricketteams_2795524f

நடிகர்சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக “நட்சத்திர கிரிக்கெட் போட்டி” (CCL) வரும் 17ம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முழுவிபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த 6 ஓவர்கள் போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் விளையாடுவார்கள். தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் தலைநகர் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது “ ‘மதுரை காலேஜ்’, ‘சென்னை சிங்கம்ஸ்’, ‘நெல்லை டிராகன்ஸ்’, ‘தஞ்சை வாரியர்ஸ்’, ‘திருச்சி டைகர்ஸ்’, ‘ராமநாடு ரைனோஸ்’, ‘கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேலம் சீட்டாஸ்’ என்று 8 அணிகளுக்கு பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள். இதில் எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இக்கிரிக்கெட் போட்டியின் மொத்த உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருபதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினி, கமல், அமிதாப், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிகிறது.

தவிர, போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியுள்ளன. இப்போட்டியின் நிகழ்ச்சி நிரல்களின் முழுமையான விபரம் ஏப்ரல் 3ம் தேதியன்று வெளியிடவிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *