ஐஸ்கிரீம் பிரியர்களே ஜாக்கிரதை!

h77

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.

பொதுவாக ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் பால் சார்ந்த பொருட்களையும், சர்க்கரையும், நறுமணத்தை தரக்கூடிய திரவியங்களையும், சில வகைகளில் உலர் பழங்களையும் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற விதைகளையும் கொண்டு தயாரிக்கின்றார்கள். இதைத் தான் ஐஸ்க்ரீம் என்று சொல்லப்படுகின்றது. இதனை தயாரிக்க கூடுதல் செலவாகின்றது.

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ‘ஐஸ்க்ரீம்’ என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன.

ஐஸ்க்ரீம் வகைகளில் saturated fat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளைவிக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகின்றது.

எனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சொந்த பணத்தை கொடுத்து சூனியம் வைத்துக் கொள்ளும் நிலைதான் உருவாகும்.குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு frozen desert வகையைான ஐஸ்கிரீம் மிகவும் ஆபத்தானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *