பிரபல நடிகருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உறுதி..! அதிர்ச்சியில் திரை உலகம்..!

pema3mKgCharlieSheen

மூன்று முறை திருமணமாகி விவாகரத்தான பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் தினமும் ஒரு ஆபாசப்பட நடிகையோடு உறவு கொண்டதால் இந்த நோய்க்கு ஆளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதாகும் ஷீன் வால் ஸ்ட்ரீட், தி த்ரீ மஸ்கட்டீர்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 2011-ம் ஆண்டு டூ அன்ட் ஆஃப் மென் படத்தில் நடித்த போது, பல்வேறு புகார்கள் காரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவரை நீக்கிவிட்டது. அதன்பிறகு வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.

கடைசியாக அவர் நடத்தி வந்த டெலிவிஷன் ஷோவும் நிறுத்தப்பட்டுவிட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியலில் உலக புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவரும் உள்ளார் என்று சமீபகாலமாக பல பத்திரிகைகளும், இணையதளங்களும் கூறி வந்தது. இந்நிலையில், சார்லஸ் ஷீன்தான் அவர் என டுடே இணையதளம் செய்தி வெளியிட்டது. அதை அவரே விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஷீன் அளித்த பேட்டியில், “ஆமாம்.. எனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இனியும் இதனை மறைக்க விரும்பவில்லை. அதே நேரம் என்னால் யாருக்கும் எய்ட்ஸ் பாதிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்,” என்று கூறியுள்ளார்.

ஷீன் ஒவ்வொரு இரவிலும் பிரபல ஆபாச நடிகைகளுடன் தூங்கியதாகவும், குறைந்தது 5 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டு இருப்பார், அதனால்தான் இந்த நோய் அவரைத் தாக்கியுள்ளது எனவும் ஹாலிவுட் சினிமா இணையதளங்கள் கூறியுள்ளன.

One thought on “பிரபல நடிகருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உறுதி..! அதிர்ச்சியில் திரை உலகம்..!

  • December 30, 2015 at 10:44 am
    Permalink

    Hmmmm…marivillous

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *