நடிகர் சங்க கணக்குவழக்கு ஆய்வில் வெளிவந்த உண்மை – அதிர்ச்சியில் விஷால் அணி!

c322

நடிகர் சங்க பொறுப்பினை நாசர் அணியினர் ஏற்ற பின்பு கடந்த 10 ஆண்டுகளுக்கான கணக்கு வழக்குகளை சரத்குமார், விஷாலிடம் ஒப்படைத்தார். கணக்கு வழக்குகளை சரிபார்க்க, ஆடிட்டர் தலைமையில், சிறப்பு தணிக்கை குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய ஆய்வில், நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே செலவு செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கு ரசீதுகளே இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் சங்கம் சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த ஐந்து வங்கிகளின் கணக்குகளை தொடர புதிய நிர்வாகிகள் விரும்பவில்லையாம். சங்கம் சார்பில் புதிதாக, இரண்டு வங்கிகளில் புதுக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது.

One thought on “நடிகர் சங்க கணக்குவழக்கு ஆய்வில் வெளிவந்த உண்மை – அதிர்ச்சியில் விஷால் அணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *