மீண்டும் மீண்டும் ஆபாசத்தின் எல்லையைத் தொடும் விஜய் டிவி!

c369

சினிமாக்களில் வரும் காட்சிகளை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிவிட முடியாது. ஏனென்றால் இதற்கு என்று தனி சென்சார் உண்டு. காரணம், சினிமா என்பது மக்கள் சென்று பார்க்கவேண்டியது. ஆனால் தொலைக்காட்சி என்பது வீட்டுக்குள்ளேயே வருவது என்பதால்தான்.

ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்க்கும் மெகா தொடர்களிலும் ஆபாசம் அதிகரித்துவிட்டது. குளியல் காட்சிகள், இரண்டை அர்த்த வசனங்கள், கொடூமான திட்டமிடல்கள் என்று சினிமாவுக்கு சற்றும் குறையாமல் “ஏ” சமாச்சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டன.

புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அசத்துவது போலவே, இந்த மோசமான விசயத்திலும் விஜய் டிவிதான் நம்பர் ஒன்.

இதற்கு சமீபத்திய உதாரணம், “கல்யாணம் முதல் காதல் வரை” தொடர். இதில் ஒரு பெண் கேரக்டர், (ப்ரியா)  “முன்னால எல்லாம் ஆசைக்கு ஒரு குழந்தை ஆஸ்திக்கு ஒரு குழந்தைன்னு சொல்லுவாங்க. இப்பல்லாம் “ஆசைக்கொரு புருஷன் ஆஸ்திக்கொரு புருஷன்”னு ஆயிடுச்சு” என்று பேசி அதிரவைத்திருக்கிறது.

இதற்கு முன்பும் விஜய் டிவி மீது இதே போன்ற புகார்கள் எழுந்திருக்கின்றன.

“டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்ற துடிப்பு சேனல்களுக்கு இருப்பது இயல்புதான். அதற்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்க வேண்டுமா” என்று கொதிக்கிறார்கள் சமூகஆர்வலர்கள்.

இனியாவது விஜய் டிவி திருந்துமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *