தாராவிற்கும் டைரக்டருக்கும் திருமணம் முடிந்தது, ரெய்டின் மூலம் வெளிவந்த உண்மை!

c1

தாரா நடிகை ரவுடி படத்தின் டைரக்டரை காதலிப்பதாகத் தான் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.

ஆனால் அந்த டைரக்டரை, தாரா நடிகை காதும் காதும் வைத்த மாதிரி கல்யாணமே செய்து விட்டாராம். அம்மணியின் சொந்த மண்ணில் தான் அது நடந்தேறியுள்ளதாம். சிலபல காரணங்களுக்காக இந்த விசயத்தை மூடி மறைத்து ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.

மேலும், சமீபத்தில் நடிகையின் வீட்டில் நடந்த திடீர் ரெய்டில், தனது குடும்ப நபர்களின் பெயரில் உள்ள சொத்து கணக்கை சமர்ப்பித்தாராம், நடிகை. அப்போது மேற்படி டைரக்டரின் பெயரிலும் சில அசையா சொத்துக்கள் இருந்ததாம்.

அதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, ”அவர் என் கணவர். அதனால் எனது சொத்துக்களை அவர் பெயரில் மாற்றியுள்ளேன்” என்று சொன்னாராம், நடிகை. அதன்பிறகே கணக்கு வழக்கு டேலி ஆனதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *