படிப்’புக்’ குழந்தையின், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!

வ்வொரு முறையும் புத்தகத்தை பார்த்து விட்டு, அதை மூடும்போதெல்லாம் அழுது அடம் பிடிக்கிறது ஒரு குழந்தை. அமெரிக்காவிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த தம்பதி டான்-அலிசியா ஸ்டீவர்ஸ். இவர்களின் பத்து மாத குழந்தை எம்மெட் ஸ்டீவர்ஸ். இந்த குழந்தைதான் புத்தகத்தை முழுவதும் பார்த்து முடித்த பின், ‘தி எண்ட்’ எனக் கூறி அந்த புத்தகத்தை மூடிய உடன், வீறிட்டு அழுகிறான்.

இந்த வீடியோவில் எம்மெட்டின் தாய், படங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை எம்மெட்டிடம் காட்டி, அதற்கான விளக்கத்தையும் கூறுகிறார். அந்த புத்தகம் முழுவதையும் பார்த்த பின்னர், ‘தி எண்ட்’ எனக் கூறி அந்த புத்தகத்தை மூடுகிறார். உடனே, அந்த குழந்தை வீறிட்டு அழுகிறது.

இதேபோல், பல்வேறு புத்தகங்களை பார்த்த பின்னரும், அதை மூடும்போது குழந்தை அழுகிறது. ஒருமுறை தரையில் கவிழ்ந்து படுத்து அழுகிறது. அந்த குழந்தையின் தந்தையும், புத்தகத்தை காட்டிவிட்டு மூடும்போது அந்த குழந்தை அழுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது யூடியூப் மற்றும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

மேலும், அந்த சிறுவனுக்கு புத்தகத்தின் மேலுள்ள பிரியத்தை வைத்து, அந்த குழந்தையை ‘புக் வோர்ம்’ (புத்தகப் புழு) என வாசகர்கள் அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=AIEeakeXvMM]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *