மீண்டும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மோதல்!

c193

சிவகார்த்திகேயன் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கின்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களாகவே தான் நடித்து வருகிறார்.

முதன் முறையாக இவர் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் நானும் ரவுடி தான். விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நானும் ரவுடிதான்’. அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ரஜினிமுருகன்’. படத்திற்கு இசை அமைத்துள்ளார் டி.இமான்.

நானும் ரவுடி தான் அக்டோபர் 2ம் தேதி வர இருக்கும் நிலையில், இதே தேதியில் தான் ரஜினிமுருகன் திரைப்படமும் வரவிருக்கின்றது. ஏற்கனவே இவர்கள் நடிப்பில் சூதுகவ்வும், எதிர் நீச்சல் படங்கள் மோதி இரண்டுமே வெற்றி பெற்றது. தற்போது வெற்றி யாருக்கு என்று பார்க்க காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *