தொடரும் எதிர்ப்பு சரவணன் மீனாட்சி தொடரை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி!

maxresdefault (1)

மற்ற சேனல்களெல்லாம் கணவன் மனைவி, மாமியார் மருமகள் பிரச்சினைகளை மையமாக வைத்து சீரியல்கள் எடுத்து வரும் நிலையில், விஜய் சேனலில் மட்டும் சற்று வித்தியாசமாக காதல், பள்ளி காலங்கள், ஆபீஸ் என இளைஞர்களை கவரும் வகையில் தயாரித்து வழங்கி வந்தனர்.

அந்த வகையில் 2011ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் சரவணன் மீனாட்சியில் இரண்டு சீசன்களாக பிரிக்கப்பட்ட முதல் பகுதியில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா இருவரும் காதலர்களாக நடித்தனர். அவர்களது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதோடு அந்த சீரியலில் இயல்பான காதலர்களாக நடித்த அவர்களுக்கிடையேயும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர். பின்னர் இரண்டாவது சீசனில் ரக்ஷிதா-வெற்றி நடித்தனர். ஆனால் முதல் பாகத்திற்கு இருந்த பெயர் இவர்கள் நடிப்புக்கு கிடைக்கவில்லை. ஆனபோதும் பழைய பெயரைக்கொண்டே இப்போது வரை நகர்த்தி வருகின்றனர். ஆனால், இன்னும் ஓரிரு மாதத்தோடு சரவணன் மீனாட்சி முற்று பெறுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வில்லன் பேசும் சில டயலாக்குகள் ஆபாசமாக இடம்பெற்று வருகிறது. இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பதால் அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் நேயர்களே, முகம்சுழிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு இணையதளங்களிலும் எதிர்ப்புகள் எழுந்ததால், தற்போது புதிதாக படமாக்கப்படும் எபிசோடுகளில் ஆபாச வசனங்கள் இல்லாத வகையில் டயலாக் எழுதி வருகிறார்களாம். அதனால் இனிவரும் எபிசோடுகள் வழக்கம்போல் இருக்கும் என்று அந்த தொடரில் நடித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

One thought on “தொடரும் எதிர்ப்பு சரவணன் மீனாட்சி தொடரை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் டிவி!

  • July 28, 2015 at 8:59 pm
    Permalink

    rompa mokkaya iruku boss. naanga saravanan meenatchi serial ku theevira rasigargal but ippo atha parkave veruppa iruku.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *