கணவரின் கன்னத்தில் பளார்விட்ட தொகுப்பாளினி, பரபரப்பு வீடியோ இணைப்பு…!

கணவரும் அவரது குடும்பத்தினரும் அடித்து கொடுமைப்படுத்துவதாக டிவி11 சேனல் தொகுப்பாளினி புகார் அளித்துள்ளார். செய்தியாளர்கள் முன்னிலையே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தாக்கிக்கொண்டு சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட டிவி தொகுப்பாளினியின் பெயர் பத்மாவதி என்பதாகும்.

இவர் டிவி11 சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையேயான ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது. இதனையடுத்து கணவரின் குடும்பத்தினரைப் பற்றி புகார் தெரிவிப்பதற்காக ஏராளமான செய்தியாளர்களையும் வீட்டிக்கு வரவழைத்து விட்டார் பத்மாவதி.

இதனால் கோபம் கொண்ட கணவரும் அவரது குடும்பத்தினரும், பத்மாவதியை வீட்டிற்குள் வரவிடாமல் கதவை சாத்தி வெளியில் பூட்ட முயன்றனர். ஆனால் அசராத பத்மாவதி கணவரின் பனியனை கிழித்து தள்ளிவிட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார். அங்கேயும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் கணவரின் கன்னத்தில் பளார் என்று விட்டார் பத்மாவதி. விடுவாரா கணவர் அடித்து துவைத்து விட்டார். ஐயோ கொல்றாங்களே என்று அங்கிருந்த செய்தியாளர்களிடம் கதறிய பத்மாவதி அருகில் இருந்த குச்சியை எடுத்து கணவரை விளாசினார்.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=xqEoXWRzgy4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *