சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது ‘மெட்ராஸ்’ ரஞ்சித்!

download

ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் அட்டக்கத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்.

தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல பெரிய இயக்குனர்கள் இயக்கி திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படம் பெரிய இயக்குநரை வைத்து மிகுந்த பொருட்செலவில் இயக்கியும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், வளரும் இயக்குனரை வைத்து தனது அடுத்த படத்தை வெளியிட ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அட்டக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் ரஞ்சித்தை வைத்து தனது அடுத்த படத்தை திரை உலகில் உலாவ விட ரஜினிகாந்த் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் என்றும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் எனப் பட்டம் தந்து, பிரமாண்ட கட் அவுட்கள் வைத்து அழகு பார்த்தவர் கலைப்புலி தாணு. ரஜினியை வைத்து சினிமா தயாரிக்க வேண்டும் என்ற அவரது பல ஆண்டு கனவு தற்போது நிறைவேற உள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது இளம் இயக்குனர் ரஞ்சித் ரஜினியின் படத்தை இயக்குவார் என்ற செய்தி தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *