கைமாகறி புட்டு!!

தேவையான பொருட்கள்

2௦௦ கிராம் கொத்து கரி
1௦௦ கிராம் வெங்காயம்
இஞ்சி சிறிய துண்டு
1௦ பல் பூண்டு
2௦ கிராம் நெய்
1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
6 முந்திரியம் பருப்பு
2 முட்டை
மல்லி இலை
3 மிளகாய்
மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு

food5

செய்முறை

கறியுடன் மிளகாய், நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றியத்தும் மிக்ஸியில் போட்டு கொற கொரப்பாக அரைத்து வைக்கவும்.

பின் சட்டியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் கருவேப்பிலை போட்டு வதக்கிய பின் அரைத்து வைத்திருக்கும் கறி, மல்லி இலை போட்டு நன்றாக கிளறி விடும்போதே உப்பு போட்டு அடித்து வைத்துள்ள முட்டையையும் ஊற்றி மேலும் மேலும் நன்றாகக் கிளறிவிடவும். சுவையான கைமாகறி புட்டு தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *