தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிறை பெருவதற்காண வழிகள்!!

web2

வயிறு, தொடை மற்றும் இடை பகுதியில் பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கொடி இடை சிக்கென்ற வயிற்றுப் பகுதி இவற்றை வேண்டாம் என்று கூறாத பெண்கள் கிடையாது. இவற்றை பெற நாம் நம் பழக்கங்களை மாற்றி அவற்றை தொடர்ந்து எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும்.

தினமும் கண்ணாடியை பார்க்கும் போது இனிமேல் கடுமையான டயட் மற்றும் உடல்பயிட்சி செய்யவேண்டும் என்று நாம் அனைவருமே நினைப்பதுண்டு. ஆனால் உணவை பார்க்கும் போது நாளையில் இருந்து டயட் இருக்கலாம் என்று நாற்றாக சாப்பிட்டுவிட்டு, மறுநாள் சரியாக சாப்பிடாமல் டயட் இருப்பார்கள் அதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. இதனால் நம்மால் எந்த உடல் பயிட்சியையும் நெடுநேரம் பண்ணமுடியாமல் போய்விடும். ஆகவே எப்போதும் சீரான டயட்டை கடைப்பிடிக்கவேண்டும். பசித்த பின் மட்டும் சாப்பிடுங்கள், அதுவும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்ககுகூடாது, அரை மணிநேரத்திற்கு முன் அல்லது பின் குடிக்க வேண்டும். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.

மேல்வயிற்றில் உள்ள தசைகளை குறைக்க இந்த பயிற்ச்சியை முயற்சி செய்யுங்கள். முதலில் தரையில் சமமாக படுத்து கால்களை மடக்கி கொள்ளுங்கள், கைகளை தலைக்கு அடியில் கோர்த்து கொள்ளுங்கள் இதுதான் பயிற்சியின் ஆரம்பநிலை. இந்த நிலையிலிருந்து மேல்நோக்கி உடலை நகர்த்த வேண்டும். அதே பொசிசனில் இரு வினாடிகள் நிறுத்தி செய்து பின் ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு முறை இதே போல் 20 முறை செய்ய வேண்டும் இது ஒரு செட் பின் ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு மறுபடியும் 20 முறை செய்யுங்கள் இதே போல் மூன்று செட்கள் செய்ய வேண்டும். இதை தொடர்ந்தது செய்யுங்கள் இடையில் எடை குறைந்து உங்கள் வயிறில் தளர்ட்சி ஏற்படுவதை உணர்வீர்கள்.

One thought on “தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிறை பெருவதற்காண வழிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *