குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

குங்குமப்பூ என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு பொருளாகும். இதனை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவே, பெண் கருவுற்றிருக்கும் போது குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவிவருகிறது. இது உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் பெண்கள் கற்பமானவுடனேயே குங்குமப்பூ கொடுப்பது நம் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று.


குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது கட்டுக்கதை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்டுவிட்டது. இது ஒருவேளை உண்மையென்றால் உலகில் கருப்பு என்னும் நிறமே இப்போது இருந்திருக்காது. ஆனால் அதற்காக குங்குமப்பூ சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இது எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியது. ஆனால் இதில் பல பக்கவிளைவுகளும் உள்ளது. குங்குமப்பூவின் நன்மை மற்றும் தீமைகளை இங்கு பார்க்கலாம்.

குங்குமபூவோட மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமா பூக்கும். இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும், அதனால் இதன் விலையும் மிக அதிகம். உலகத்தில் விலையுயர்ந்த மசாலா பொருட்களில் குங்குமப்பூ இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒருவேளை உங்களுக்கு விலை குறைவா குங்குமப்பூ கிடைச்சா நிச்சயம் அது தரமான குங்குமப்பூவா இருக்காது.


குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது. நிறத்தை அதிகரிக்க இது உதவாவிட்டாலும் இதன் மற்ற நன்மைகளுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி முழுமையடையும். மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம். இது ஏராளாமான நன்மைகளை தரவல்லது.

கர்ப்பமாயுள்ள பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை கொடுக்கலாம். இது அவர்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும், பசியை நன்கு தூண்டும். மேலும் தொடர்ந்து குங்குமப்பூவை சேர்த்துக்கொண்டால் சளி, இருமல் தாக்கக்கூடிய வாய்ப்புகளும் குறையும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *