சூப்பர் டிலக்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

செக்க சிவந்த வானம், 96 என தொடர்ந்து வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் விஜய் சேதுபதி தனது அடுத்த படமான சூப்பர் டிலக்ஸ்சின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வந்த படத்திற்கு முதலில் அநீதிக்கதைகள் என பெயரிட்டிருந்தாக கூறப்பட்டது.

அது தற்போது சூப்பர் டிலக்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் பெண் வேடத்தின் பெயர் ஷில்பா எனவும் படக்குழு கூறியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் மேலும் நதியா, மிஸ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளிவந்த 96 படத்தில் வரும் ஒரு வசனம் அதிகம் பிரபலமடைந்துவிட்டது. த்ரிஷா விஜய் சேதுபதியை பார்த்து ‘நீ ஆம்பள நாட்டுக்கட்டை’ என சொன்ன வசனம் தான். சூப்பர் டிலக்ஸ் படத்தில் அவர் பெண் வேடத்தில் நடித்துள்ளதால் “இனி அவர் ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட” என நடிகர் அசோக் செல்வன் விமர்சித்துள்ளார். மேலும் ட்விட்டரில் பல பிரபலங்கள் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *