காதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்!

காதுவலி என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வரக் கூடிய ஒன்று. சில நேரங்களில் காதுக்குள் குடு குடுவென சத்தம் போல் ஏற்படும். இந்த காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று மற்றும் அதிக இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும்.

இப்படி வலி ஏற்பட்டால் உடனே நாம் காதுக்குள் எதையாவது கொண்டு நுழைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அப்படி செய்யக் கூடாது. இதனால் உங்கள் காதில் உள்ள மெல்லிய சவ்வுகள் பாதிப்படையலாம். மாறாக இதற்கு சில கை வைத்திய முறைகள் உள்ளன. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இந்த பாட்டி வைத்தியங்களைத் தான் பின்பற்றி வந்தார்கள். அந்த முறைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பூண்டு இரண்டு பூண்டு பற்களை எடுத்து கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது எண்ணெய்யை லேசாக சூடேற்றி பூண்டு கறுப்பாக மாறும் வரை காய்ச்சி ஆற விடவும். இப்பொழுது இந்த எண்ணெய்யை காதில் 2-3 சொட்டுகள் விட்டால் உங்கள் காது தொற்று குணமாகும்.

3 கிராம் ஓமம் மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள், 30-40 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் எல்லாம் சேர்த்து காய்ச்ச வேண்டும். பூண்டும், ஓமமும் சிவப்பாக மாறும் வரை சூடுபடுத்தி ஆற விடவும். பிறகு இந்த எண்ணெய்யை காது சொட்டு மருந்தாக பயன்படுத்தி வாருங்கள்.

துளசி கொஞ்சம் துளசி இலைகளை நசுக்கி அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். சாற்றை நன்றாக சக்கை இல்லாமல் வடிகட்டி கொண்டு வடித்து அதை 2 சொட்டுகள் காதில் விடவும்.

கிராம்பு கிராம்பை நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை சில சொட்டுகள் காதில் ஊற்ற வலி குறையும். கிராம்பு வலி நிவாரணியாக செயல்படும்.

வெதுவெதுப்பான கடுகு எண்ணெய்யை கூட காதில் ஊற்றி வர தொற்று குறையும். கடுகு எண்ணெய் நிறைய நோய்த் தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. புண்களையும் ஆற்றும் ஆற்றல் மிக்கது.

நசுக்கிய பூண்டு பற்கள், 1 டீ ஸ்பூன் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டையும் சேர்த்து காய்ச்சி காதில் ஊற்றி வரலாம்.

வெதுவெதுப்பான இஞ்சி சாற்றை கூட பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வர நல்லா வலி குறையும்

வெங்காயத்தின் சாற்றை பிழிந்து, அதை காட்டன் பஞ்சில் நனைத்து அதை காதில் பிழிந்து விட அழற்சி மற்றும் மைக்ரோ பியல் தொற்றால் ஏற்பட்ட அரிப்பு, சிவத்தல், வலி குணமாகும்.

1/4 பங்கு அளவு இனிப்பு பாதாம் பருப்பு எண்ணெய்யை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக காதில் ஊற்றி காதை சுற்றி இருக்கும் பகுதிகளில் லேசாக மசாஜ் செய்து விடவும். இதை நீங்கள் ஆலிவ் ஆயிலில் கூட செய்யலாம்.

வொயிட் வினிகர், ரப்பிங் ஆல்கஹால் இரண்டையும் சேர்த்து காதுகளில் சொட்டு விட வேண்டும். பிறகு ஒரு காட்டன் பஞ்சை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு காதை மூடி விட வேண்டும். இந்த முறையை காது பிரச்சினை குணமாகும் வரை செய்து வாருங்கள்.

4 பூண்டு பற்களை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அந்த தண்ணீரை நன்றாக சூடுபடுத்த வேண்டும். பிறகு வேக வைத்த பூண்டை நசுக்கி கொள்ளவும். கொஞ்சம் 1டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட்டை குலைத்து இதை ஒரு துணியில் தடவி பாதிக்கப்பட்ட காதில் வைத்து கொள்ளுங்கள். காதில் ஏற்பட்டுள்ள தொற்று குணமாகி விரைவில் வலி குறைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *