வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்!

நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும், இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம்.

வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும்.

ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத மருத்துவம் உள்ளது.

தேவையான பொருட்கள்
 • பச்சை தக்காளி – 2
 • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  செய்முறை
  • முதலில் பச்சை தக்காளிப் பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்த அந்த பானத்தை தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்க வேண்டும் அல்லது இந்த தக்காளி பழங்களின் தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.
  நன்மைகள்
  • இந்த இயற்கை முறை மருத்துவத்தை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது.
  • பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின், நமது உடலில் ஏற்படும் ரத்தம் கட்டுதலை குறைக்கிறது. மேலும் இது நரம்புகளின் சுவர்களை வலிமையாக்கி, வெரிகோஸ் வெயினை எளிதில் குணப்படுத்த உதவுகிறது.
  • உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
  குறிப்பு
  • வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது, மருத்துவரிடம் டயாபெட்டீஸ் மற்றும் ஹைபர் டென்ஷன் உள்ளதா என்பதை சோதனை செய்துக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *