குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தைகள் தாயின் கருவறையில் வளரும் பொழுது, அன்னையின் கருவறை கதகதப்பில், அன்னை உண்ணும் உணவின் உதவியில் வாழ்ந்து வளர்ந்து வந்திருப்பர்! குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் மிகவும் மென்மையானவர்களாக, எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் வகையில் இருப்பர். ஆகையால், குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்!

குழந்தைகள் தாயின் வயிற்றில் வளரும் பொழுது, வளர்ச்சியின் கடைசி மூன்று மாத கால கட்டங்களில், தாயின் உடலில் இருந்தே நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவர். எவ்வளவு நோய் எதிர்ப்பு சாதியை குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்பதை தாயின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனை வைத்து, தாயின் நோய் எதிர்ப்பு மண்டலம் முடிவு செய்யும். அப்படி முடிவு செய்யபட்ட அளவு நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக தாயின் உடல் அளிக்கும்!

தாயின் உடலில் முழு வளர்ச்சி பெற்று வெளி வரும் பொழுது, தாயின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சில நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறன் மேம்பட உதவும். மேலும் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பொழுது அன்னைக்கு எந்த ஒரு நோயோ, காய்ச்சலோ ஏற்பட்டு இருந்தால், அதை எதிர்த்து போராட தாயின் உடல் உற்பத்தி செய்த நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கும் அளிக்கப்படும். இது தாயிடம் இருந்து குழந்தைகள் பெரும் கூடுதல் சலுகை என்றே கூறலாம்.!

குழந்தைகள் பிறந்து இரண்டு மாத காலம் ஆன பின், குழந்தையின் உடலில் காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ண ஒரு தடுப்பூசி போடப்படும்; அது குழந்தையின் வளர்ச்சி நிலையில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சற்று பலப்படுத்த உதவும். மேலும் குழந்தை ஒரு வயதை அடையும் பொழுது குழந்தைக்கு MMR எனும் தடுப்பூசி போடப்படும்; அது மேலும் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்! இந்த விஷயங்கள் தவிர குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

குழந்தைகளுக்கு பிறந்த பின் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் அளிக்க வேண்டியது தாய்மாரின் கடமை; குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கிடைக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டியது தந்தையின் கடமை! குழந்தைகள் திட உணவை உண்ண தொடங்கும் நிலையில் கூட அவர்களுக்கு சத்துள்ள, உடலின் உறுப்புகள், உள்ளுறுப்புகள் மற்றும் அவர்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிலைப்படுத்த உதவும் உணவுகளை அளிக்க வேண்டும்.

குழந்தைகள் அவர்தம் வளர்ச்சிக்கு போதுமான அளவு உறக்கத்தை எந்த வித தொந்தரவும் இன்றி மேற்கொள்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை! அதிலும் குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் அதிக நேரம் உறங்கியே இருக்க வேண்டும்; அப்பொழுது தான் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும்! குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் சரியாக குழந்தைக்கு பால் அளித்து விட வேண்டியது தாய்மார்களின் கடமை!

குழந்தை இருக்கும் இடம், குழந்தையை தொடும் நபர்கள், குழந்தாய் எடுத்து விளையாடும் பொருட்கள் மற்றும் தவழ்ந்து விளையாடும் இடங்கள், படுத்து உறங்கும் இடம் என அனைத்து பகுதிகளும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்! இவை போக, மிக முக்கியமான விஷயம் என்ன என்றால், குழந்தைகள் உண்ணும் உணவு மிக சுத்தமான பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.!

இந்த அனைத்து செயல்பாடுகளும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற நன்கு உதவும்.குழந்தைகள் பாதுகாப்பாக வளர்ந்து நோய் நொடியில்லாத வாழ்க்கையை மேற்கொள்வர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *